நண்பர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது...இதாங்க டாபிக் : ஆங்கிலத்தில் மிகப்பெரிய வார்த்தை எது மற்றும் மிகச்சிறிய வார்த்தை எது? விக்கி, கூகிள் என்று ஆளாளுக்கு தேடி சண்டை போட்டுக்கொண்டிருக்க, வழக்கம் போல தப்பாய் சில பதில்களை சொல்லி விட்டு சில பல பல்புகளை சுமந்து ஒரு ஓரமாய் அமர்ந்து விட்டத்தை பார்த்தபடியே என் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டேன்.
மனதில் இருந்த பெரிய கேள்வி இதாங்க : தமிழில் பெரிய வார்த்தை எது?
தமிழ் லெக்ஸிகான், விக்கி, கூகிள் மற்றும் எனக்கு தெரிந்த சில தமிழ் பேசும் தளங்களில் தேடித்தீர்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. பதில் தெரியாமல் படுத்தால் தலை வெடித்து விடும் போலிருந்தது. சரி, இதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் என் தமிழாசிரியர் ஒருவரால் தான் இது முடியும் என்று அவர் தொலைபேசி எண்ணை தேடினேன். அப்பொழுது எதார்த்தமாக தொலைக்காட்சியை ஆன் செய்தேன். ஏதோ ஒரு தமிழ் படத்தின் இறுதிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது....உற்றுப்பார்த்தேன், யுரேகா!!!! கண்டுபிடித்து விட்டேன்..தமிழின் பெரிய வார்த்தையை கண்டே பிடித்து விட்டேன்.(டேய், பில்டப்ப விடு...மேட்டருக்கு வா)
இதாங்க அந்த சீன்:(சண்டையிட்டு பிரிந்த நாயகனும் நாயகியும் இறுதியில் சேரும்போது பேசிக்கொள்கிறார்கள்)
நாயகி: அத்தான்!!!
நாயகன்: கண்ணே, உனக்கு துரோகம் செய்து நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன், தயவு செய்து என்னை மன்னித்து விடு
நாயகி: அன்பே, என்ன இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் பேசுகிறீர்கள்....
ஆகவே குழந்தைகளே, தமிழில் பெரிய வார்த்தை 'என்ன மன்னிச்சிடுங்க'...வேணும்னா, யார்கிட்டயாவது சொல்லிப்பாருங்க, அவங்களும் இதையேதான் சொல்லுவாங்க.
சரி, சரி வாங்குன பல்ப தொடச்சி வச்சிட்டு போய் வேற வேலய பாருங்கப்பு.
Wednesday, November 14, 2007
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வார்த்தை
Posted by மா.கணேஷ் குமார் at 8:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
"கருத்து(???)" கணேசன்னு prove பண்ணிட்டீங்க!!!
என்ன பண்றதுங்க...என் மூளை சும்மாவே இருக்க மாட்டேங்குது, இப்படி ரொம்ப முக்கியமான விஷயங்களை விடாம யோசிச்சிட்டே இருக்கு.
இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் படி பொது அறிவு வளருவது போல கருத்து சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும்........ Hats off...........
Post a Comment